விஷ்ணு ஆசனம்

வழிமுறைகள்
வலது பக்கத்தில் சாய்ந்து படுக்கவும். வலது முட்டிக்கை தரையில் படும்படி, வலது உள்ளங்கையால் தலையை தாங்கி கொள்ளவும். இடது உள்ளங்கை தரையில் படும்படி, நெஞ்சத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளவும். கால்களை நன்கு நீட்டி, நேராக வைத்துக் கொள்ளவும். இடது காலை மெல்ல மேலே தூக்கவும். காலை மேலே தூக்கியவாறு, வட்டமிடவும். பின் காலை கீழே கொண்டு வரவும். இவ்வாறு மற்றொரு பக்கம் திரும்பி வலது காலை மேலே தூக்கி, வட்டமிட்டு பின் கீழே கொண்டு வரவும். ஒரு பக்கத்தில் 5-6 முறை செய்யவும்.

பலன்கள்
இந்த ஆசனம் இடுப்பெலும்பை நன்கு உறுதியாக்கும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். கைகளுக்கு உறுதி தரும்.

கவனம்
இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு உகந்த ஆசனம் 



சிசு ஆசனம்

வழிமுறை
குதிகாலில் அமர்ந்து கொண்டு, புட்டத்தை குதிகால் மீது வைக்கவும். பின்னர், தரையை நோக்கி சாய்ந்து நெற்றியை தரையில் பதிக்கவும். உள்ளங்கை மேல்நோக்கி இருக்க, கைகளை உடலின் பக்கத்தில் தரையில் வைத்துக் கொள்ளவும். மார்பகத்தை தொடையோடு படச்செய்யவும். பின், எழுந்து வஜ்ரா ஆசனத்திற்குத் திரும்பவும்.

பலன்கள்
உடலின் பின்புறத்தின் களைப்புகளைக் களையும். மலச்சிக்கலை தவிர்க்கும். நரம்பு மண்டலத்தை சாந்தமாக்கும்.

கவனம்
கர்ப்பிணி பெண்களுக்கு இது உகந்த ஆசனம் அல்ல. வயிற்றுப்போக்கு (பேதி) உள்ளவர்களுக்கு இது உகந்த ஆசனம் அல்ல.



ஷலபாசனம்
இது வெட்டுக்கிளி ஆசனம் எனப் பொருள்படும்.

வழிமுறைகள்
உடலின் முன்புறம் தரையில் படும்படி படுத்துக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு, வலது காலை மெல்ல மேலே தூக்கவும். இடுப்பை வளைக்காமல், காலை நேராக வைத்துக் கொண்டு மேலே தூக்கவும். மேலே தூக்கியநிலையில் காக்கவும். பின் மூச்சை வெளியேவிட்டபடி வலது காலை மெல்ல கீழே கொண்டு வரவும். இதே வழிமுறைகளைக் கொண்டு இடது காலை மேல்தூக்கி கீழ் இறக்கவும். பின், இரண்டு கால்களுடன் செய்யவும்.

பலன்கள்
உடலின் பின்புறத்திற்கு பலத்தை தரும். தோள்பட்டையும் கையும் வலிமை பெறும். கழுத்து மட்டும் தோள்பட்டையின் தசைகள் மற்றும் நரம்புகளை சீராக்கி, வலிமையாக்கும். வயிற்று உறுப்புக்களை சீராக்கி, செரிமாணத்தை சீராக்கும்.



விருக்ஷாசனம் 

விருக்ஷ என்றால் மரம் என்று பொருள். மரம் போல் நிற்கும் நிலையே விருக்ஷாசனம். 

ஆசனத்தின் படிநிலைகள் 

1) ஒற்றைக் காலில் நின்றபடி கைகள் இரண்டையும் மேலே தூக்கிக் காதுகளை ஒட்டி கூப்பிக்கொள்ள வேண்டும்.

2) நிற்கும் கால் நிலையாக, நேராக இருக்க வேண்டும்.

3) நிற்கும் காலின் தொடை மீது மடித்துவைக்கப்பட்ட கால் பாதம் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.

4) மடித்துவைக்கப்பட்ட கால் பாதம், நிற்கும் காலின் மீது முழுமையாகப் படிந்திருக்க வேண்டும்.

5) மடித்துவைக்கப்பட்ட கால் 90 டிகிரி அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும்.

6) மடித்துவைக்கப்பட்ட காலின் தொடைக்கும் குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இல்லாத நிலையே ஆகச் சிறந்த நிலை.

ஆசனம் தரும் பலன்கள்:

1) கால்களின் வலிமையையும் தாங்கும் திறனையும் கூட்டுகிறது.

2) பாதங்களின் இணைப்புகள், ஜவ்வுகளுக்கும் திசுக்களுக்கும் வலிமை ஊட்டுகிறது.

3) இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்துவந்தால் பாதம் முதல் முதுகெலும்பு வரையில் முழு காலுக்கும் வலிமை கூடும்.

4) காலின் வடிவத்தில் அழகு கூடும்.

5) இடுப்புப் பகுதியின் உறுதித்தன்மையைக் கூட்ட உதவும்.

6) இடுப்பெலும்புகளின் வலிமை கூடும்.

7) விருக்ஷாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, தடுமாற்றத்தைப் போக்குகிறது.

8) கவனக் குவிப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது.

9) தொடர்ந்து செய்துவந்தால் மனதின் தடுமாற்றங்களும் பதற்றங்களும் குறைந்து மனச் சமநிலை கிடைக்கும். படிப்படியாக நம் வாழ்விலும் சமநிலை கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.



தினமும் பத்மாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இந்தியாவில் 5000 ஆண்களுக்கு முன் தோன்றிய உடற்பயிற்சி தான் யோகாசனம். யோகாசனம் என்றால், மனதை அலையவிடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலையவிடாமல் இருக்கத் தான் யோகா செய்யும் போது கண்களை மூடிக் கொள்கின்றோம்.

யோகாசனங்களில் நிறைய உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நன்மைகளை உள்ளடக்கியது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு யோகாவும் ஒவ்வொரு விதமான செயல்முறையைக் கொண்டிருக்கும். இருப்பதிலேயே பத்மாசனம் என்ற யோகா தான் செய்வதற்கு மிகவும் எளிமைகவும், இலகுவாகவும் இருக்கும். இந்த யோகாசனம் செய்ய தினமும் 10 நிமிடங்கள் போதும். இந்த யோகாசனத்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும். இப்போது பத்மாசனத்தை எப்படி செய்வது மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

| இடுப்பிற்கு நல்லது |

பத்மாசனம் செய்யும் போது இடுப்பு மற்றும் கணுக்கால்களில், இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், அவ்விடங்களை நீட்சியடையச் செய்யும்.

| மனம் அமைதி அடையச் செய்யும் |

பத்மாசனம் செய்யும் போது ஒரே இடத்தில் அமர்ந்து, மனதை ஒருநிலைப்படுத்தி உடற்பயிற்சி செய்வதால், மனம் அமைதி அடைந்து, மன அழுத்தத்தைப் போக்கும்.

| விழிப்புணர்ச்சி |

பத்மாசனத்தை தினமும் செய்து
வருவதன் மூலம் நமது மூளை
நன்கு சீராக செயல்பட்டு,
விழிப்புணர்வுடன் செயல்பட
உதவும். இதனால்
அலுவலகத்தில் நமது உற்பத்தி
திறன் அதிகரித்து, நல்ல பெயரை
வாங்கலாம்.

| முதுகெலும்பிற்கு நல்லது |

பத்மாசனம் செய்யும் போது, நேராக அமர்ந்து செய்வதால், அது முதுகெலும்பிற்கு நல்ல உடற்பயிற்சியாக அமைந்து, முதுகெலும்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள துணைபுரியும்.

| மாதவிடாய் பிரச்சனைகள் |

பெண்கள் பத்மாசனம் செய்து வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

| மூட்டுகளுக்கு நல்லது |

பத்மாசனம் செய்யும் போது மூட்டுகளை மடக்கி செய்வதால், இது மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். மேலும் பத்மாசனம் செய்வதன் மூலம், அடிவயிறு மற்றும் இடுப்பெலும்பிற்கும் நல்லது.

| பத்மாசனம் செய்யும் முறை |

முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும். பின் வலது காலை மடக்கி, இரண்டு கைகளாலும் இடது காலின் தொடை மீது, குதிகால் வயிற்றை தொடும் அளவிற்கு வைக்கவும். இதேப்போல் மற்றொரு காலையும் மடக்கி, வலது காலின் தொடையின் மீது, வயிற்றை தொடும் அளவிற்கு நெருக்கமாக வைக்கவும்.

பின் நேராக அமர்ந்து, கண்களை மூடி கைகள் இரண்டையும் முட்டிகளின் மீது, உள்ளங்களை மேல் நோக்கியவாறு, கட்டை விரல், ஆள்காட்டி விரலைத் தொட்டுக் கொண்டு இருக்கும் வண்ணம் 5 நிமிடம் மூச்சை உள் வாங்கி வெளியே விட்டவாறு அமர வேண்டும். பிறகு இதேப்போல் கால் மாற்றி மற்றொரு பக்கம் செய்ய வேண்டும்.




தினமும் சூரிய நமஸ்காரம் செய்வோம்!



திரிகோணாசனம் (Trikonasana)

திரிகோண ஆசனம். திரிகோணம் என்பது முக்கோணத்தைக் குறிக்கும்.

**செய்முறை

-கால்கள் இரண்டையும் அகலமாக வைத்து நிற்கவும். பின்னர் இரண்டு கைகளயும், சுவாசத்தை உள்ளிழுத்தவாறு, இரண்டு பக்கமாக மேலே தூக்கி விரித்து நிறுத்தவும்

-அடுத்து, சுவாசத்தை வெளியிட்டபடி, குனிந்து வலது கையை மட்டும் கீழ் நோக்கிக் கொண்டுவந்து, இடது காலின் விரல்கள் மீது வலது கை விரல்கள் படுமாறு வைக்கவும்.

-அதேசமயம், இடது கையை நன்றாக மேலே உயர்த்தி நீட்டவும். குனிந்த நிலையில், முகத்தை இடதுபக்கமாக மேல்நோக்கித் திருப்பிய நிலையில், கண்களால் மேலே நீட்டப்பட்டிருக்கும் இடது உள்ளங்கையை உற்றுப் பார்க்கவும். அதே நிலையில், இயன்ற அளவு சுவாசிக்கவும்.

-பின்னர், சுவாசத்தை உள்ளிழுத்தவாறு, வலது கையை மேலே உயர்த்தியபடியும், இடது கையை கீழே தாழ்த்திக்கொண்டும் வரவும். உடலை நேராக வைத்து, இரண்டு கைகளையும் தொங்கவிட்டு ஓய்வு எடுக்கவும்.

-இதேபோல், கைகளை மாற்றிச் செய்யவும். கைகளை மாற்றி மாற்றி பத்து முறை செய்யவும்.

பலன்கள்

-முதுகுத்தண்டு இடது பக்கமாகவும், வலது பக்கமாகவும் கீழ்ப்பக்கமாகத் திருகப்படுவதால், நுரையீரல்கள் சரிந்த நிலையில் நிறைய காற்றை உள்ளிழுக்கின்றன இதனால், நுரையீரல்களின் அடிப்பாகத்தில் உள்ள அசுத்தக் காற்று முழுமையாக வெளியேற்றப்படுகிறது.

-கருவிழிகளை மேல்நோக்கித் திருப்பிப் பார்ப்பதால், கண்களுக்கு ரத்த ஓட்டம் முழுமையாகக் கிடைத்து, பார்வைப் புலன் கூர்மையாகிறது.

-காதுகளின் உட்பகுதிக்கு நுட்பமான முறையில் ரத்தம் பாய்வதால் செவிப் புலன் செம்மையாகிறது.

-கல்லீரல், மண்ணீரல் திருக்கப்படுவதால், செரிமான உறுப்புகள் புத்துணர்வு பெறுகின்றன. சர்க்கரை நோய் குணமாகும்.

இது ஓர் எளிமையான ஆசனம். முயற்சி செய்து பாருங்கள்!



வஜ்ராசனம்

வஜ்ர என்றால் வைரம் அல்லது மின்னல் எனப் பொருள்படும். ஆசனம் என்றால் இருக்கை அல்லது பாவனை எனப் பொருள்படும். ஆகவே வஜ்ராசனம் என்றால் வைரம் போன்ற பாவனை எனப் பொருள் கொள்ளலாம். வஜ்ராசனம் எளிதான ஓர் யோகாசனப் பயிற்சியாகும்.

|| செய்முறை ||

1) முட்டிக் கால்களை நெருக்கமாக வைத்துக் கொண்டு தரையில் முட்டிப் போடவும்.
2) கால் கட்டைவிரல்களை நெருக்கமாக்கி குதிகால்களை தூரமாக்கிக் கொள்ளவும்.
3) மெதுவாக இடுப்பின் பின்புறத்தை கீழிறக்கி கால்கள் மீது அமர்த்தவும்.
4) இரண்டு கைகளையும் முட்டிக் கால்களின் மீது சின்முத்திரையில் வைக்கவும்.
5) 15 முதல் 30 நொடிவரை அதே நிலையில் கண்களை மூடிக் கொண்டு பயிற்சி செய்யவும். பிறகு மெல்ல எழுந்து (முட்டிப் போட்ட நிலையில்) மற்றொரு பக்கம் திரும்பி மீண்டும் இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்யவும்.
*இந்த ஆசனத்தின் போது உடம்பை நேராக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

|| பலன்கள் ||

1) பாதம், கணுக்கால், மூட்டு ஆகிய இடங்களில் தசைப்பிடிப்பைக் குறைத்து, எலும்புகளை உறுதியாக்கும்.
2) சாப்பிட்ட பிறகு இந்த ஆசனத்தை செய்வதால் ஜீரணத்தை விரைவாக்கும்.
3) உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு மிகவும் பொருத்தமான ஆசனம் இது.
4) ரத்த ஓட்டத்தை சீராக்கி இடுப்பு பகுதியில் அமைந்திருக்கும் நரம்புகளை சீராக்கும்.
5) இடுப்பெலும்பையும் இடுப்பு தசைகளையும் உறுதியாக்கும். இடுப்பு பகுதியின் கொழுப்புகளைக் குறைக்கும்.
6) முதுகெலும்பை நேராக்கி சுவாசத்தையும் சீராக்கும்.

யோகாசனங்களிலே மிகவும் எளிதான ஆசனங்களில் வஜ்ராசனமும் ஒன்றாகும். இதை அனைவரும் கண்டிப்பாக பயிற்சி செய்து நல்ல பலன்களை பெறவேண்டும். பலன்கள் என்பது உடனடியாக கிடைப்பதல்ல. அடிக்கடி முறையாகப் பயிற்சிகள் செய்து வந்தால் பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும். ஒரு நல்ல வழிகாட்டுநரை தேர்ந்தெடுத்து அவர்மூலமாக பயிற்சி செய்வதும் சிறப்பாகும்.




விருக்‌ஷாசனம்

விருக்‌ஷம் என்றால் மரம் எனப் பொருள்படும். ஆசனம் என்றால் இருக்கை அல்லது பாவனை எனப் பொருள்படும். எனவே விருக்‌ஷாசனம் என்பதை மரம் போன்ற பாவனை எனப் பொருள் கொள்ளலாம். விருக்‌ஷாசனம் மிகவும் பிரபலமான ஒரு யோகாசனம் ஆகும்.

|| செய்முறை ||

1) ஒற்றைக் காலில் நின்றபடி கைகள் இரண்டையும் மேலே தூக்கிக் காதுகளை ஒட்டி கூப்பிக்கொள்ள வேண்டும்.
2) நிற்கும் கால் நிலையாக, நேராக இருக்க வேண்டும்.
3) நிற்கும் காலின் தொடை மீது மடித்துவைக்கப்பட்ட கால் பாதம் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.
4) மடித்துவைக்கப்பட்ட கால் பாதம், நிற்கும் காலின் மீது முழுமையாகப் படிந்திருக்க வேண்டும்.
5) மடித்துவைக்கப்பட்ட கால் 90 பாகை (டிகிரி) அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும்.
6) மடித்துவைக்கப்பட்ட காலின் தொடைக்கும் குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இல்லாத நிலையே ஆகச் சிறந்த நிலை.
*குதிகால் மூட்டுக்காலை தள்ளும்படி நிற்பதை தவிர்த்து விடவும். குதிகால் மூட்டுக்கு மேலே பதிந்திருப்பது சாலச் சிறப்பு.
7) இதேபோன்று 30 முதல் 60 நொடி வரை பயின்றி, பின்னர் கால்களை மாற்றி பயிலவும்.

|| பலன்கள் ||

- கால்களின் வலிமையையும் தாங்கும் திறனையும் கூட்டுகிறது.
-பாதங்களின் இணைப்புகள், ஜவ்வுகளுக்கும் திசுக்களுக்கும் வலிமை ஊட்டுகிறது.
-இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்துவந்தால் பாதம் முதல் முதுகெலும்பு வரையில் முழு காலுக்கும் வலிமை கூடும்.
-காலின் வடிவத்தில் அழகு கூடும்.
-இடுப்புப் பகுதியின் ஸ்திரத்தன்மையைக் கூட்ட உதவும்.
-இடுப்பெலும்புகளின் வலிமை கூடும்.
-விருக்ஷாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, தடுமாற்றத்தைப் போக்குகிறது.
-கவனக் குவிப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது.
-தொடர்ந்து செய்துவந்தால் மனதின் தடுமாற்றங்களும் பதற்றங்களும் குறைந்து மனச் சமநிலை கிடைக்கும். படிப்படியாக நம் வாழ்விலும் சமநிலை கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.





Share/Bookmark

ஆசனம்

கோடைக்காலம் மிக அருகில் என்பதை வாட்டியெடுக்கும் வெயில் உணர்த்துகிறது. வெயில் காலத்தில் குளுமை தரும் உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் உடல் நலம் சீராக இருக்கும்.
* வெயிலில் அலைந்துவிட்டு வருகிறவர்களுக்கு, செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்து இயற்கை குளிர்பானங்களைத் தரலாம். எலுமிச்சை சாறு பிழிந்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் தேவையான போது அதனுடன் குளிர்ந்த நீர் ஊற்றிப் பருகத் தரலாம்.
* எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
* மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை போன்றவற்றுக்கு உகந்தது எலுமிச்சைச் சாறு.
* எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகளும் சுருக்கங்களும் மறையும். எலுமிச்சைச் சாற்றுடன் சிறிது பால் ஏடு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளிச்சிடும்.
* தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகிவர உடல் எடை குறையும். இதையே இரவில் குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும். மனம் அமைதி அடையும்.
* தலையில் சிறிது எலுமிச்சைச் சாற்றைத் தடவி, சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். பித்தம், உடல் சூடு அடங்கும்.
* எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்துவந்தால் வறட்டு இருமல் தீரும்.
* மருதாணியை அரைத்து எலுமிச்சைச் சாற்றில் கலந்து பாதத்தில் தடவிவந்தால் பாத எரிச்சல் குணமாகும்.
* எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம், கிருமிகளை அழிக்கும்.



Share/Bookmark

குறிப்புகள் பலவிதம்: எலுமிச்சை நல்லது!

கழிவு நீர் மேலாண்மை
2030-ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும், மத்தியக் கிழக்கு நாடுகளைப் போல இந்தியாவும் தண்ணீர் நெருக்கடி நாடாக மாறும்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம். குளம், குட்டைகள், ஆறுகளை ஆழப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும், தண்ணீர் சிக்கனம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளதால், கழிவு நீரைக் கூட ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அவ்வகையில், வீட்டுக் கழிவு நீர் மூலம் வீட்டுத் தோட்டத்துக்குப் பாசனம் செய்து வருகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெல்ஜோசப்.  70 வயதான ஜெல்ஜோசப்பை தூத்துக்குடி கிருபைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நீர் மேலாண்மைச் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம். மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டே நம்மிடம் பேசத்தொடங்கினார். ''என்னோட பூர்விகம் தூத்துக்குடிதான். மதுரையில் லேப் டெக்னீசியன் படிப்பு முடிச்சுட்டு, மைசூர்ல 5 வருஷம் வேலை பாத்தேன். அப்பறம்  தூத்துக்குடிக்கே வந்து தனியா லேப் ஆரம்பிச்சுட்டேன். எனக்கு அடிப்படையில் இயற்கையின் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் அதிகம். அதனாலதான் வீட்டுத் தோட்டம் போட்டு பராமரிச்சுட்டு இருக்குறேன். தோட்டத்துக்கு எங்க வீட்டுக் கழிவுகளையே உரமாக்கிடுவேன். அதே மாதிரி வீட்டுல எந்தக் கழிவு நீரையும் வெளிய விடுறதில்லை. அதையும் தோட்டத்துக்கே பாய்ச்சிடுவேன்' என்று முன்னுரை கொடுத்த ஜெல்ஜோசப் தொடர்ந்தார்.
செப்டிக் டேங்க் கிளீன் செய்யத் தேவையில்லை!
'அதேமாதிரி, உதிர்ற இலை, பூக்கள் எல்லாத்தையும் ஒரு மூலையில் போட்டு சாணத்தைக் கரைச்சு தெளிச்சுவிட்டா, அதுல மண்புழுக்கள் உருவாகிடும். அதை வெச்சு மண்புழு உரம் தயாரிச்சு பயன்படுத்திக்குவேன். அதேமாதிரி தென்னைமரத்தின் அடிப்பகுதியைச் சுத்தி தேங்காய் நாரை வரிசையாக அடுக்கிடுவேன். அதனால், தென்னைக்கு எப்பவுமே ஈரப்பதம் கிடைச்சுட்டே இருக்கும். 'செப்டிக் டேங்க்’ கழிவு நீரை செடிகளுக்குப் பாய்ச்சினா செடிகள் கறுத்துடும், கிருமிகள் உருவாகும்னு சொல்றாங்க. ஆனா, எங்க வீட்டு செப்டிக் டாங்க் கழிவு நீர்ல 'பேசிலஸ் சப்டாலிஸ்’ங்கிற பாக்டீரியாவைக் கலந்து, அந்தத் தண்ணீரை நேரடியா செடிகளுக்கு விட்டுட்டு இருக்கேன். இந்த பாக்டீரியா, மலத்தை சாப்பிட்டுடும். வெறும் தண்ணிதான் வெளியவரும். இந்த பாக்டீரியாவைப் பயன்படுத்தும்போது, கழிவறையை சுத்தம் செய்ய பினாயிலை பயன்படுத்துனா பாக்டீரியாக்கள் செத்துடும். அதே நேரத்துல ஆரஞ்சு, எலுமிசைச் பழத்தோல்களை காய வெச்சு அரைச்சு அது மூலமா கழிவறையை சுத்தப்படுத்தலாம்' என்ற ஜெல்ஜொசப் கழிவு நீரை சுத்திகரிக்கும் முறைகளைச் சொன்னார்.
சுலபமாக சுத்திகரிக்கலாம்!
'பாத்ரூமில் இருந்து வருகிற சோப் தண்ணீர், துவைத்த சோப் தண்ணீர் ஆகியவற்றை நேரடியாகச் செடிகளுக்குப் பாய்ச்சக் கூடாது. அதை வடிகட்டி சுத்திகரித்துத்தான் பாய்ச்ச வேண்டும்.
இரண்டு கிணறு உறைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அமைத்து, தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலிருந்து தண்ணீர் கசிந்து செல்வது போல, வாய்க்கால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் அடிப்பரப்பில் இரண்டு அங்குல அளவுள்ள ஜல்லிக் கற்களைப் பரப்பி, அதன் மேல் முக்கால் அங்குல அளவுள்ள ஜல்லிக் கற்களைப் போட்டு... அதன் மீது கொசுவலையை விரித்து, வலைக்கு மேல் சலித்த பருமணலை நிரப்ப வேண்டும். சோப் கலந்த கழிவு நீரை குழாய் மூலம் இத்தொட்டிக்குள் விழுமாறு அமைத்துக் கொள்ளவேண்டும். தொட்டியின் நடுப்பகுதியில் சேம்புச் செடியை நட்டு விட வேண்டும். சேம்புச் செடி, நுரை கலந்த சோப்புத் தண்ணீரை உறிஞ்சி நல்ல தண்ணீரை மட்டுமே அடியில் விடும். தொட்டியின் மேல் மட்டத்திலேயே தேவையற்றக் கழிவுகள் படர்ந்து விடும். தவிர, தொட்டி நடுவில் வலை அமைத்திருப்ப தால் நீர் வடிகட்டப்பட்டு விடும்.
தாத்தா பாட்டிகள்..!
நிறைவாகப் பேசிய ஜெல் ஜோசப், ''முருங்கை, சோற்றுக்கற்றாழை, மணப்புல், புளிச்சகீரை, பப்பாளி, வேம்பு, துளசி, கருந்துளசி, இன்சுலின், ஆடாதொடை, அம்மான் பச்சரிசி, சிறியாநங்கை, பெரியாநங்கை, தூதுவளை, பூண்டு, கீழாநெல்லி, வேலிக்காத்தான், ஃபாஷன் ஃப்ரூட், வெட்டுக்காயத் தழைனு எல்லாமே வீட்டுல இருக்கு. இது எல்லாமே எல்லா வீட்டுலயும் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகைகள். இந்த மூலிகைகள்தான் நம் தாத்தா, பாட்டிகள். அதேமாதிரி மூலிகைகளின் பெயர்களையும், மருத்துவ குணங்களையும் சின்னப் பிள்ளைகளுக்கு கண்டிப்பா சொல்லிக் கொடுக்கணும். 'வீட்டுச் சத்தம் வெளியே போகக் கூடாது’ என்று பெரியவங்க சொல்லுவாங்க. அதே வீட்டுக் கழிவுநீரையும் வெளிய விடாம உபயோகிச்சா வீட்டுத் தோட்டத்தைச் செழிக்க வைக்கலாம்'' என்று சொல்லி விடைகொடுத்தார்.


தினம் தினம் எரிவாயு!
ஜெல்ஜோசப், சமையலறைக் கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயு தயாரித்து, அடுப்பு எரிப்பதற்கு பயன்படுத்துகிறார். தினமும் ஒரு மணி நேரம் அளவுக்கு தற்போது இவருக்கு எரிவாயு கிடைத்து வருகிறது. இதன் அமைப்பு மற்றும் பயன்பாடு குறித்து, அவர் தந்த தகவல்கள்-
இந்த எரிவாயுக் கலன் அமைப்பதில், சிற்சில முறைகள் இருக்கின்றன. 'தரைக்கு மேல் மிதக்கும் கலன் அமைத்தல்' என்கிற முறை, எளிமையானதாகவும் குறைந்த செலவுடையதாகவும் இருக்கும். நான்கு அடி உயரம், மூன்றரை அடி விட்டம் கொண்ட சாண எரிவாயுக் கலன் அமைத்துக் கொள்ள வேண்டும் (இது மிதக்கும் கலன், கீழிருக்கும் கலன் என இரண்டு பாகங்கள் கொண்டது. ரெடிமேடாகவும் கிடைக்கும்). இதில் உட்செலுத்தும் குழாய், செரிப்பான், வாயுச் சேகரிப்பான், சாணக்கழிவுக் குழம்பு வெளியேறும் பகுதி, வாயு உற்பத்தியை வெளியே கொண்டு செல்லும் குழாய் இணைப்பு என மொத்தம் ஐந்து பாகங்கள் இருக்கும்.
முதல்முறையாக உற்பத்தி செய்யத் தொடங்கும்போது 400 கிலோ சாணம் மற்றும் 400 லிட்டர் தண்ணீர் தேவை. இரண்டையும் 1;1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து, நன்கு கலக்கி, 800 லிட்டராக்கிவிட வேண்டும். கலவையை நன்கு கிளறிவிடும்போது, குப்பைகள் மேலே மிதக்கும். அவை அனைத்தையும் அகற்றிவிட வேண்டும். இந்த அளவு கரைசல் எப்போதுமே கலனில் இருக்க வேண்டும். இந்தக் கரைசலுக்கு 'ஸ்டார்ட்டர் கரைசல்’ என்று பெயர். இந்தக் கரைசலை, உட்செலுத்தும் குழாயில் புனல் மூலம் ஊற்றி, மூடி விடவேண்டும். இந்தக் கரைசல் செரிப்பானை அடையும். அங்கே, அனரோபிக் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால், ஒரு வார காலத்தில், மிதக்கும் கலன் படிப்படியாக உயர ஆரம்பிக்கும். 2 வாரத்தில் சாண எரிவாயு முழுவதுமாக உற்பத்தியாகிவிடும். எரிவாயு, வெளிச்செல்லும் குழாய் மூலம், அடுப்பை வந்தடையும். கலன் அரை அடி உயர்ந்ததுமே, அடுப்பைப் பற்ற வைத்து சோதித்துப் பார்க்கலாம். ஆனால், ஆரம்பத்தில் 4-5 நாட்களுக்கு சாண எரிவாயுவைப் பயன்படுத்தாமல், வெளியில் விட்டு விடவேண்டும். காரணம், சாணத்தின் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். 6-வது நாளில் இருந்து எந்தவித துர்நாற்றமும் இருக்காது.
ஆரம்பத்தில் ஒரு வாரம் வரை, புதிதாக கலனுக்குள் எந்த இடுபொருளையும் போடாமல் எரித்துப் பார்க்கலாம். பிறகு, தினமும் நம் வீட்டுச் சமையல் கழிவுகளை (காய்கறிகள், அழுகியப் பழங்கள், வெங்காயத் தோல்கள் என அனைத்தும்) போடலாம். மேலும் எவ்வளவு சாணம் கிடைக்கிறதோ, அதில் சமஅளவு தண்ணீரையும் சேர்ந்து அன்றாடம் கலனில் செலுத்தலாம். கலனில் எப்பொழுதும் கரைசல் முழுவதுமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் (உதாரணமாக, ஒரு வாளி சாணம், என்றால் ஒரு வாளி தண்ணீர்), அதிகமான கரைசலும் கூடாது. வாயு உற்பத்திக்குப் பிறகு, சாணக்கழிவு குழம்பானது வெளியேறும் குழாய் மூலமாக வெளியேறிவிடும். இதைச் சேமித்து பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் தயாரிப்பு மற்றும் அசோலா வளர்ப்புக்கும் உயிர் உரமாகவும் பயன்படுத்தலாம்.
தொடர்புக்கு,
ஜெல்சோசப்,
செல்போன்: 94864-54263

Share/Bookmark

வீட்டுக் கழிவு நீரில் செழிக்கும் செடிகள்!


இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!!
Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.
முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினார்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;
"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.
புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.
நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.
பழங்கள் சாப்பிடும் முறை;;
எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.
நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?
பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!
பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!
பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!
பழங்கள் ஒரு முக்கியமான உணவு;
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.
பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.
அதனால் தயவு செய்து பழங்களை *வெறும் வயிற்றில்* அல்லது‪#‎உணவுக்கு‬ முன்# சாப்பிடுங்கள்.!!
பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.
""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .
உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!
உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!
நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
** நடக்காமல் தடுக்கப்படும்**
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால் Dr. Herbert Shelton என்பவர் இந்த. வகையில் ஆராய்ச்சிகள் செய்து. கூறியதன்படி,எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.
சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் **ரகசியம்** கிடைத்து விடும்.
3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, **புதிதான** பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்**வேண்டாம்**.
சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.
பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.
சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.
ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.
உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.
கிவி பழம்;
இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.
ஆப்பிள்;
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!
ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!
ஸ்ட்ராபெர்ரி ;
பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.
ஆரஞ்சு;
இனிப்பான மருந்து.
ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.
தர்பூசணி;
மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.
கொய்யா& பப்பாளி
இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.
##################
உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது = புற்று நோய்.
ஓர் இதயநோய் நிபுணர் சொல்வது;;
இந்த தகவலைப் பெறும் ஒவ்வொரு நபரும், 10 நபர்களுக்காவது இத்தகவலை அனுப்பினால்,நிச்சயமாய் ஒரு உயிரையாவது காப்பாற்றலாம்.!

Share/Bookmark

ஆரோக்கியம்

2016 கடன் தீர்க்க உகந்த நாட்கள் -மைத்ர முகூர்த்தம்

கடன் தீர,கடன் தீர்க்க வேண்டிய நாட்கள்-மைத்ர முகூர்த்தம்;

கீழ்க்கண்ட நாட்களில் வட்டி கட்டுதல்,கடனில் சிறு தொகையை திருப்பி கொடுத்தால் பெரிய கடன்களும் விரைவில் தீரும்...!!

6.1.16 புதன் காலை 6.22 முதல் 6.40 வரை
7.1.16 வியாழன் அதிகாலை 4.40 முதல் 6.40 வரை
17.1.16 ஞாயிறு மதியம் 12 முதல் 2 வரை
2.2.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40
6.2.16 சனி காலை 6 முதல் 6.30 வரை
6.2.16 சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை
6.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
13.2.16 சனி காலை 10.43 முதல் 12 வரை
20.2.16 சனி காலை 9.30 முதல் 11.30 வரை
20.2.16 சனி மதியம் 3.30 முதல் 5.30 வரை
20.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
29.2.16 திங்கள் இரவு 11.08 முதல் 1.08 வரை
1.3.16 செவ்வாய் இரவு 11.12 முதல் 1.22 வரை
12.3.16 சனி காலை 8.16 முதல் 10.16 வரை
28.3.16 திங்கள் இரவு 8.56 முதல் 10.56 வரை
 8.4.16 வெள்ளி காலை 6.20 முதல் 8.20 வரை
24.4.16 ஞாயிறு இரவு 8.40 முதல் 10.40 வரை
6.5.16 வெள்ளி காலை 4.36 முதல் 6.36 வரை
22.5.16 ஞாயிறு மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை
2.6.16 வியாழன் அதிகாலை 2.40 முதல் 4.40 வரை
18.6.16 சனி மாலை 4.12 முதல் 6.12 வரை
29.6.16 புதன் நள்ளிரவு 12.56 முதல் 2.56 வரை
2.7.16 சனி காலை 6.52 முதல் 8.52 வரை
2.7.16 சனி மதியம் 12.52 முதல் 2.52 வரை
2.7.16 சனி மாலை 6.52 முதல் இரவு 8.52 வரை
15.7.16 வெள்ளி மதியம் 2 முதல் 4 வரை
26.7.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை
12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
22.8.16 திங்கள் இரவு 10.24 முதல் 12.24 வரை
8.9.16 வியாழன் காலை 10.36 முதல் மதியம் 12.36 வரை
19.9.16 திங்கள் இரவு 8.08 முதல் 10.08 வரை
5.10.16 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை
6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை
16.10.16 ஞாயிறு மாலை 6 முதல் இரவு 8 வரை
2.11.16 புதன் காலை 7 முதல் 9 வரை
13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல் 6.12 வரை
26.11.16 சனி காலை 10.40 முதல் 12.40 வரை
26.11.16 சனி மாலை 4.40 முதல் 6.40 வரை
26.11.16 சனி இரவு 10.40 முதல் 12.40 வரை
29.11.16 செவ்வாய் காலை 6.52 முதல் 7.52 வரை
10.12.16 சனி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை
26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை
27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை

Share/Bookmark

2016 கடன் தீர்க்க உகந்த நாட்கள் -மைத்ர முகூர்த்தம்



மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ‘நாரைக்கு முக்தி தரும் புராண நிகழ்வை’ முன்னிறுத்தும் வகையில், பொற்றாமரைக் குளக்கரையில் காத்திருந்த நாரை  உயிர்விட்ட சம்பவம் பக்தர்களை பெரும் பரவசத்திற்கு ஆளாக்கியுள்ளது. முற்காலத்தில் பாண்டிய நாட்டு தென்பகுதியில் ஒரு குளத்தில் வாழ்ந்த மீன்களை உண்டு,  நாரை ஒன்று வாழ்ந்தது. வறட்சியால் குளம் வற்றிப்போக, உணவின்றி தவித்த நாரை அங்கிருந்து, காட்டுப்பகுதியில் இருந்த ஒரு குளத்தை நோக்கிச் சென்றது.  தவமிருந்த முனிவர்கள் அக்குளத்தில் நீராடியதைக் கண்டது. அவர்கள் மீது, மீன்கள் தவழ்ந்ததை பார்த்தது. அந்த மீன்களை உண்பது  பாவமென கருதி நின்றிருந்தது.  அப்போது சத்தியன் என்றொரு முனிவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெருமையை சக முனிவர்களிடம் பேசியது கேட்டது. எனவே அங்கிருந்து மதுரை மீனாட்சி  அம்மன் கோயில் வந்து, அங்கிருந்த பொற்றாமரைக் குளத்தை அடைந்தது. 

கோயில் குளத்து மீன்களை உண்பது பாவமென்பதால், சுந்தர விமானத்தையே சுற்றி சுற்றிப் பறந்தது. மீன்களை உண்ணாமலேயே 15 நாட்களாக அக்குள  பகுதியிலேயே தங்கி இருந்தது. இதனை கண்ட சுந்தரேஸ்வரர் பெருமான் நாரை முன் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டார். ‘எங்கள் இனத்தவர்கள்  மீன்களை உண்டு வாழும் சுவாபம் கொண்டவர்கள். இப்புண்ணியக் குளத்தில் அதைச் செய்யாமல் இருக்க இங்கு மீன்களே இல்லாத நிலையும், எனக்கு சிவலோகம்  தங்கும் பாக்கியமும் தந்தருளுங்கள்’ என்றதாம் நாரை. இதன்படியே, சுந்தரேஸ்வரர் நாரைக்கு முக்தி அளித்ததாக திருவிளையாடல் புராணம் பேசுகிறது.  மீனாட்சி  கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேசுவரர் நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

 இந்த புராண வரலாற்றை நினைவுறுத்தும் வகையில் கடந்த 5நாட்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தைத் தேடி ஒரு நாரை  வந்து தங்கி இருந்தது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஒவ்வொரு நாளும் ஆச்சர்யத்துடன் கண்டு களித்து, வந்தனர். வெயிலில் நாரை நிற்பதைக் கண்ட பக்தர்  ஒருவரும், இந்த நாரைக்கென ஒரு குடையை குளக்கரை ஓரத்தில் கட்டி வைத்தார். மீனாட்சிகோயில் குளத்தில் மீன்கள் எதையுமே தேடாமல் பட்டினியாக  நான்கைந்து நாட்களை இந்த குடை நிழலில் கழித்த நாரை, நேற்று மாலையில், திருவிளையாடல் புராணத்தை நினைவுறுத்தும் விதமாக முடிவாக இறந்து போனது.  கோயில் நிர்வாகம் சார்பில் இந்த நாரை நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. உலகப்புகழ்மிகு மீனாட்சியம்மன் கோயிலில் புராண நிகழ்வு, நேரடி நிகழ்வாக  நடந்திருப்பது பக்தர்களை பெரும் பரவசத்திற்கு ஆளாக்கி இருக்கிறது
.

Share/Bookmark

மீனாட்சி கோயிலில் ‘புராண நிகழ்வாக’ பொற்றாமரை குளக்கரையில் உயிர் விட்ட நாரை