ஆசைகளை அடக்கி மனதைச் சாந்தமாக்கும் ''#காமஜயி முத்திரை''

 


செய்முறை:-

                முதலில் விரிப்பில் நேராக உட்காரவும். தண்டுவடம், கழுத்து, தலை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கவேண்டும். மூன்றுமுறை ஆழமாகவும், நிதானமாகவும் சுவாசிக்கவும். பின்; இடது கையை சின் முத்திரையில் வைத்து வலது கையின் கட்டை விரலை மடக்கி ஆட்காட்டி விரலின் முனை கட்டை விரலின் நகக் கண்களை லேசாக அழுத்தம்படி வைக்கவும். மற்ற மூன்றூ விரல்களையும் லேசாக மடக்கியபடி வைக்கவும். இதுவே காமஜயி முத்திரையாகும்.


 பலன்கள்:-

                 மனிதனுடைய எல்லாத் துன்பங்களுக்கும் அவன் செய்த பாவங்கள் தான் காரணம். அந்த பாவங்களுக்கு ஆசையே காரணம். காமம், குரோதம், லோபம் எனும் மும்மலங்களைப் போக்கும் இந்த முத்திரை. இந்த மூன்று குணங்களும் அகன்றுவிட்டால் மனம் சாந்தமாகி விடும்.


காலம்:-

           இந்த முத்திரையை காலை மாலை   இருவேளைகளிலும் பூஜையறையிலோ, அமைதியான ஒரு இடத்திலோ உட்கார்ந்து செய்யலாம். இந்த முத்திரையைத் தொடர்ந்து பயிற்சி செய்துவர மனம் அமைதியாவதைக் கண்கூடாகக் காணலாம். (உணரலாம்)


                     - தன்வந்திரி~1000 நூலில் இருந்து

No comments :

No comments :

Post a Comment