சந்தனத்தை இட்டுக் கொள்வதில் உள்ள நியமங்கள்
சந்தனத்தை அரைத்தல், பூஜைக்கு உபயோகித்தல் மற்றும் மனிதர்கள் இட்டுக் கொள்வதில் உள்ள நியமங்கள்
1) சந்தனத்தை அரைத்த பிறகு பெருவிரல் படாமல் சந்தன கட்டை மற்றும் கல்லிருந்து சந்தனத்தை எடுக்கவும்.
2) பெருவிரல் பித்ரு சம்மந்தம் என்பதால் நிஷேதிக்கப்பட்டுள்ளது.
3) அரைத்த சந்தனத்தை வேறு ஒரு செப்பு தட்டிலோ அல்லது ஒரு சிறிய வாழை இலையிலோ எடுக்க வேண்டும்.
4) சந்தனத்தை நேரான கட்டையிலோ அல்லது கல்லிருந்தோ எடுத்து பூஜைக்கு உபயோகப்படுத்துவது சம்பிரதாயம் அல்ல.
5) சந்தனத்தை அரைத்த பிறகு சந்தன கட்டையை கல்லின் மீது வைக்கக்கூடாது. தனித்தனியாக வைக்கவும்.
6) முடிந்தவரை பூஜைக்கு ஸ்த்ரீகள் சந்தனத்தை அரைக்கக்கூடாது. ஆபத்கால அவச்யமேற்பட்டால் செய்யலாம்.
7) ஸ்த்ரீகள் சந்தனத்தை கழுத்தில் தான் இட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் கேரளத்தில் அவர்கள் ஆசாரம் இதற்கு விதிவிலக்கு.
8) புருஷர்கள் சந்தனத்தை நெற்றியில் தான் இட்டுக் கொள்ள வேண்டும், கழுத்தில் அல்ல.
9) போஜனத்திற்கு பிறகு உபசாரத்திற்கு மார்பில் இட்டுக் கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment