செய்முறை:-

                முதலில் விரிப்பில் நேராக உட்காரவும். தண்டுவடம், கழுத்து, தலை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கவேண்டும். மூன்றுமுறை ஆழமாகவும், நிதானமாகவும் சுவாசிக்கவும். பின்; இடது கையை சின் முத்திரையில் வைத்து வலது கையின் கட்டை விரலை மடக்கி ஆட்காட்டி விரலின் முனை கட்டை விரலின் நகக் கண்களை லேசாக அழுத்தம்படி வைக்கவும். மற்ற மூன்றூ விரல்களையும் லேசாக மடக்கியபடி வைக்கவும். இதுவே காமஜயி முத்திரையாகும்.


 பலன்கள்:-

                 மனிதனுடைய எல்லாத் துன்பங்களுக்கும் அவன் செய்த பாவங்கள் தான் காரணம். அந்த பாவங்களுக்கு ஆசையே காரணம். காமம், குரோதம், லோபம் எனும் மும்மலங்களைப் போக்கும் இந்த முத்திரை. இந்த மூன்று குணங்களும் அகன்றுவிட்டால் மனம் சாந்தமாகி விடும்.


காலம்:-

           இந்த முத்திரையை காலை மாலை   இருவேளைகளிலும் பூஜையறையிலோ, அமைதியான ஒரு இடத்திலோ உட்கார்ந்து செய்யலாம். இந்த முத்திரையைத் தொடர்ந்து பயிற்சி செய்துவர மனம் அமைதியாவதைக் கண்கூடாகக் காணலாம். (உணரலாம்)


                     - தன்வந்திரி~1000 நூலில் இருந்து


Share/Bookmark

ஆசைகளை அடக்கி மனதைச் சாந்தமாக்கும் ''#காமஜயி முத்திரை''

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை மையமாகக் கொண்டு எழுந்துள்ள சர்ச்சையில், ஆகமங்களுக்கு எதிராக, பல கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த கருத்துகளின் உண்மைத் தன்மையை பக்தர்கள் கணிக்க வேண்டுமானால், ஆகமம் என்றால் என்ன, கோவில்களின் இயக்கத்தில் அவற்றின் பங்கு என்ன, ஆகமங்களைப் பற்றி தமிழ் இலக்கியத்தில் என்ன குறிப்பிடப்பட்டு உள்ளது ஆகிய கேள்விகளுக்கு, விளக்கம் தேவைப்படுகிறது.

ஆகமம் என்றால் என்ன?



இஸ்லாமியர்களின் பள்ளி வாசலுக்குள் தொழுகைக்குச் செல்லும் முன், தலையில் துணியோ, தொப்பியோ இருக்க வேண்டும்; கால், கைகள் சுத்தமாக கழுவப்பட வேண்டும் உள்ளிட்ட விதிகள் உள்ளன. அதே போல், எந்தெந்த நேரத்தில் தொழுகை நடத்தப்பட வேண்டும், எந்த திசையை பார்த்து தொழ வேண்டும், என்ன ஓதப்பட வேண்டும் என்றெல்லாம் விதிகள் உள்ளன. ஹிந்து மதத்திலும், இது போன்ற வழிபாட்டிற்கான விதிகள் உள்ளன. வழிபாட்டு முறைகளை விளக்கி, அதற்கான விதிகளை, வழிகாட்டுதல்களை முன்வைக்கும் நுால்களே, ஆகமங்கள். இவற்றில், வழக்கமாக நான்கு பகுதிகள் இருக்கும்.அவை:
* ஆன்மிக தத்துவம்
* உடல் மற்றும் மன ஒழுக்க நெறிகள்
* கோவில் வடிவமைப்பு, கட்டுமானம், சமய ஒழுக்கம் ஆகியவற்றுக்கான விதிகள்

* வழிபாடு, பண்டிகை, சடங்கு, சிறப்பு சடங்கு ஆகியவற்றுக்கான விதிகள்ஹிந்து மதத்தின் ஆறு பெரும் சமயங்களும், தங்கள் கோவில்களை, ஏதேனும் ஒரு ஆகமத்தின் அடிப்படையிலேயே அமைத்துள்ளன. சைவ சமயத்தை பொறுத்தவரை, 28 ஆகமங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும், இதில் ஏதேனும் ஒன்றின்படி அமைக்கப்பட்டவை. தஞ்சை பெரிய கோவில், மகுடாகமம் என்ற ஆகமப்படி அமைக்கப்பட்டது.

ஆகமத்தின் முக்கியத்துவம்



'இங்கு நாத! நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால்
உனை அர்ச்சனை புரிய பொங்குகின்றது என் ஆசை'

மேற்படி வரிகள், 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த செந்தமிழரான, சேக்கிழார் சுவாமிகளின் பெரிய புராண வரிகள். அதன் மூலம், 'ஆகமங்கள், சிவபெருமானால் அருளப்பட்டவை; அந்த ஆகமங்களின் படியே இறைவனை அர்ச்சிப்பது / பூஜிப்பது ஆசை' என்பதை புரிந்து கொள்ளலாம். ஆகமங்கள், சிவபெருமானால் தான் அருளப்பட்டவை என்பதற்கு, திருமுறையில் பல சான்றுகள் உள்ளன. அவற்றில் சில:

* அரவோலி ஆகமங்கள் - திருமுறை 7.100

* தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் - திருமுறை 03.023
* வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நுால் - திருமுறை 10.8.15

* ஆகும் அனாதி கலை ஆகம வேதம் - திருமுறை 10.8.15
* முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் - திருமுறை 12.026 திருமுறை



தவிர, பிற தமிழ் நுால்களிலும், பல்லாயிரக்கணக்கான சான்றுகள் உள்ளன. இதை விட, ஆகமத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்ற, வேறென்ன சான்று தேவை!
பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமையால்
- திருமுறை 12.004 என்று, சேக்கிழார் சுவாமிகள் பெரியபுராணத்தில் அருளியுள்ளார்.

இதன் கருத்து: வேதங்களைப் புகலிடமாகக் கொண்ட, எங்கும் நிறைந்த சிவபெருமானை பூஜிக்க, கோவில்களும், அவற்றுக்கான நிபந்தனைகளும், ஆகமங்கள்படி அமைக்கப்பட வேண்டும். மேற்படி தமிழ் இலக்கியம், ஆகமத்தை, 'துங்க' அதாவது, 'உயர்ந்த' என்று குறிப்பிடுகிறது. எனவே ஆகமங்களையும், சிவபெருமானின் இருப்பிடமான மறைகளையும் ஒதுக்கினால், பெருமானும் ஒதுங்கி விடுவார்.


திருமுறையில், இன்னும் பல இடங்களில், வேதாகமபடி தான் சிவபெருமானின் கோவில்களில் பூஜை, அர்ச்சனை முதலிய அனைத்து சடங்குகளும் நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப் பட்டு உள்ளது. சில உதாரணங்கள்:
* மறையவன் மறைவழி வழிபடு மறைவனம் அமர்தரு பரமனே - திருமுறை 01.022

* செப்பிய ஆகம விதியால் ஆ முறையில் அர்ச்சனை செய்து அந்நெறியில் ஒழுகுவரால் - திருமுறை 12.06

* எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்ப - திருமுறை 12.016
* உம்பர் நாயகர் பூசனைக்கு அவர்தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை - திருமுறை 12.025 மேலும், வேள்விகளை வேதங்கள் விதித்த வழியே செய்ய வேண்டும் என்பதை, திருவீழிமிழலைப் பதிவில் காணலாம்.புந்தியினால் மறை வழியே புல் பரப்பி நெய் /நெல் சமிதை கையில் கொண்டு - திருமுறை 01.132

கல்வெட்டு



தஞ்சை பெரிய கோவில் ஆகம முறைப்படி கட்டப்பட்டிருப்பதை, 'தஞ்சாவூர்' என்ற கல்வெட்டு ஆராய்ச்சி நுாலில், 'மகுடாகமம் எனும் ஆகம நெறியிலும், மகா சாயிகா பதம் என்ற பத-விந்நியாச அடிப்படையிலும் எழுப்பப்பட்டதே ராஜராஜேச்சரம்' என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் குறிப்பிடப்பட்டு உள்ள மகா சாயிகா பதம் என்பது, கோவில் கட்டப்படும் முன், அதற்கான மனையை பிரித்து அளவிடும் முறைகளில் ஒன்று.


இந்த முறை, ஆகமத்தில் இருக்கிறது. விஜயநகர ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட, ப்ருஹதீஸ்வர மஹாத்மியம் என்ற நூலில், இது பற்றிய சமஸ்கிருத குறிப்பு உள்ளது. இதுவும், பெரிய கோவிலுக்கும் மகுடாகமத்திற்கும் உள்ள தொடர்பை ஊர்ஜிதம் செய்கிறது. சரபோஜி மன்னரின் காலத்தில் எழுதப்பட்ட பெருவுடையார் உலா எனும் நுாலும்,

'ஆதிசைவர் நீடு மகுடாகமத்தில் ஆட்டத்தில்
ஓதிசைவில் செய்பூசை உட்கொண்டு'

என்ற வரிகளின் மூலம், இதை உறுதி செய்கிறது.

மகுடாகமம், 28 சைவ ஆகமங்களில், 17வது ஆகமமாகும். 'மகுடம் மகுடம் தந்த்ரம் அங்க-ப்ரத்யங்கம் ஏவ ச' என்ற மகுடாகம வசனத்தை அறிந்து, சைவ ஆகமங்களையே தன் வடிவாகக் கொண்ட சிவபெருமானின் தலையான, மகுடாகம முறைப்படியே, சிவபெருமானுக்குத் தலைசிறந்த கோவிலை எழுப்ப வேண்டும் - என்பதை, ராஜராஜ சோழன் கருதியிருக்கிறார்.

வேற்று மந்திரங்கள்



தற்போது சிலர் மிக சாமர்த்தியமாகக் கேட்பதாக எண்ணி, 'ஆகமங்களில் வேற்று மந்திரங்களை சொல்லக்கூடாது என்று எங்கேனும் உள்ளதா?' என்று கேட்கின்றனர்.'தமிழில் மொழிபெயர்த்து குரானை ஓதக்கூடாது என்று சொல்லி இருக்கிறதா?' என்பது போன்ற, முட்டாள்தனமான கேள்வி தான் மேற்படி கேள்வியும். ஆகமங்கள் போன்ற வழிபாட்டு நெறி நுால்களில், என்ன செய்ய வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும்.


ஆகமங்களில் மந்த்ர உத்தாரபடலம் என்ற பகுதியில், எந்தெந்த மந்த்ரங்களைச் சொல்லி வழிபட வேண்டும் என்று ஒரு பெரும் பட்டியல் இருக்கும். அந்த மந்திரங்களைச் சொல்லி தான் பூஜிக்க வேண்டும் என்பது, அந்த ஆகமத்தின் கட்டளை.வேற்று மந்திரங்கள் வடமொழியில் இருந்தாலும், அவற்றைச் சொல்லக் கூடாது என்பது தான் ஆகமங்களின் கருத்தாகும்.


அவ்வாறு சொன்னால் அது மந்திரக் கலப்பு. அப்படிப்பட்ட கலப்பு தவறு என்று,

'சிவ சித்தாந்த தந்த்ரேன ஆரப்தம் கர்ஷணாதிகம்|
ந குர்யாத் அன்யதந்த்ரேண குர்யாத் சேத் கர்த்ரு நாசனம்'
என்ற மேற்கண்ட வரிகள் வாயிலாக ஆகமங்கள் தெரிவிக்கின்றன.

ஆதீனங்களின் தீர்மானம்



இதுவரை ஆகமங்களின் முக்கியத்துவத்திற்கான சான்றுகளாக நாம் பார்த்தவை, 800 ஆண்டு களுக்கு மேல் பழமை வாய்ந்தவை. அவற்றில் பெரும்பாலான சான்றுகள் தமிழ் மொழியில் உள்ளன. இருப்பினும் தற்போது, உண்மையை மறைத்தும் திரித்தும் பேசும் பொய்யர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கும், நம் செந்தமிழ் வைதிக சைவ முறை விளங்காது என்பதை,

'கையில் உண்ணும் கையரும் கடுக்கடின் கழுக்களும்

மெய்யைப் போர்க்கும் பொய்யரும் வேத நெறியை அறிகிலார்'

என்ற ஆனைக்கா பதிகம் உணர்த்துகிறது.அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், சைவர்களும் அவ்வாறு இருக்கலாமா?


கடந்த, 2002 அக்டோபர், 21 மற்றும் 22ம் தேதி, தருமை ஆதீனத்தின் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனமும் தமிழ்நாடு அர்ச்சகர்களின் ஆகம வல்லுனர் குழுவும் இணைந்து நடத்திய கருத்தரங்கில், 'ஆகம முறைப்படி அமைந்த திருக்கோவில்களில் ஆகம முறைப் படியே பூஜித்தல் வேண்டும்' என்பது தான், முதல் தீர்மானமாக இருந்தது. இதில், 15 சைவ ஆதீன குருமகா சன்னிதானங்கள் கையொப்பமிட்டு உள்ளனர். அதுவும், கருத்தரங்கில் பங்கேற்ற தமிழ் அறிஞர்கள் மற்றும் சிவாச்சாரிய பெருமக்கள் முன்னிலையில்!


இந்த நிலையில், மகுடாகம முறைப்படி எழுப்பப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில், வேதாகம முறையை புறந்தள்ளிவிட்டு, அடிப்படை ஆதாரமற்ற புதிய முறையில் குடமுழுக்கு நடத்துவது சரிதானா என்று, கையொப்பமிட்ட அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இது, சைவ சமயத்திற்கு செய்யும் பெரும் துரோகம் அல்லவா!

-முனைவர் ஸே.அருணஸுந்தர சிவாச்சார்யர்

-மெட்ராஸ் சமஸ்கிருத கல்லுாரி ஆசிரியர்

சட்டத்தின் நிலைப்பாடு



தஞ்சை பெரியகோவிலில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரும் சிலர், அதற்காக முன் வைக்கும் வாதங்கள்:


* பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜன் தமிழ் முறைப்படித் தான் கோவிலை கட்டினார்
* முதல் குடமுழுக்கும், அதன் பின் பல நுாற்றாண்டுகளாக தமிழ் முறைப்படி தான் அர்ச்சனைகள், பூஜைகள் முதலியன நடைபெற்று வந்தன

* பெரிய கோவில் கல்வெட்டுகள், தமிழ் முறைப்படி பூஜைகள் நடைபெற்று வந்தமையை ஆவணப்படுத்தியுள்ளன. இவை மூன்றுமே பொய்யான வாதங்கள். அவற்றிற்கான எந்த ஆதாரத்தையும், இவர்களால் காட்ட முடியவில்லை. இவர்களிடம் எந்தப் புராதன தமிழ் மந்திரங்களும், தமிழ் ஆகமங்களும் இல்லை.இவர்களாக தற்போது இட்டுக் கட்டிய வசனங்களும், அவர்களாக சுயமாக தொகுத்த பாடல்களுமே உள்ளன.


இவ்வாறு செய்யலாம் என, ஒரே ஒரு மகான் கூட அனுமதி கொடுக்கவில்லை. இவையெல்லாம் பக்தர்களை ஏமாற்றும் செயல்கள்.மேலும், தமிழ்நாடு கோவில் நுழைவுச் சட்டம் விதிகள், 8 மற்றும் 9ன் படி, 1947ம் ஆண்டு கோவில்களில் என்ன பூஜை முறைகள் இருந்தனவோ, அவற்றை மாற்றி அமைக்கவோ, கூட்டவோ, குறைக்கவோ, புதிதாக ஒன்றைச் சேர்க்கவோ இயலாது.


கடந்த, 1991ம் ஆண்டு, மத்திய அரசு கொண்டு வந்த வழிபாட்டுத் தலங்கள் சட்டம், பிரிவுகள் 3 மற்றும் 4ன் படி, 15.08.1947 அன்று ஒரு வழிபாட்டுத் தலத்தில் எந்த சம்பிரதாயம் பின்பற்றி வரப்பட்டதோ அதை மாற்ற, நீதிமன்றம் உள்ளிட்ட எவருக்கும், அதிகாரம் கிடையாது. அவ்வாறு மாற்றினால், பிரிவு 6ன் கீழ் மூன்று ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

சமீபத்தில் வந்த உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி வழக்கு அமர்வு, இதை விரிவாக தெளிவுபடுத்தி உள்ளது. புதிது புதிதாக மத விஷயங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பிரச்னைகளை உருவாக்கி நீதிமன்றம் செல்வதை, இந்த சட்டம் உறுதியாக தடை செய்கிறது.


ஆகவே, தமிழ்நாடு கோவில் நுழைவு சட்டப்படியும், மத்திய வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படியும், அந்த சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் ஆணித்தரமான தீர்ப்பின் படியும்; ஆதிசைவ தமிழர்களின் பழைய வழிபாட்டு முறையை அழிப்பதையே குறியாக கொண்டிருக்கும், நாத்திகர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், பிறரும் சேர்ந்து உருவாக்கியுள்ள (மேலே நோட்டீசை பார்க்கவும்) தமிழின் வேடம் பூண்ட, 'புதிய முறை குடமுழுக்கு' நிராகரிக்கத்தக்கது.

பெயரும், ஆகமமும்!



தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில், அங்கு தொண்டு செய்தவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் சில:சதாசிவன், ஞானசிவன், மனோன்மசிவன், பூர்வசிவன், தர்மசிவன், கவசசிவன், சத்யசிவன், வாமசிவன், நேத்ரசிவன், ஓங்காரசிவன்.ஏன் எல்லா பெயர்களும், 'சிவன்' என்றே முடிவுறுகின்றன என்ற கேள்விக்கு, வேதசிவாகமங்களை ஒழித்து, உலகின் வேறு எந்த நுால்களிலிருந்தும் பதிலை பெற முடியாது.

இறைவனுக்கு பணிவிடை செய்ய வேண்டுமென்றால், சைவ ஆகமங்களின்படி தீக்ஷை பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த தீக்ஷை சடங்கின் போது, வேள்விச்சாலையின் மையத்தில் மண்டலம் அமைக்கப்பட்டு, அதில் ஐந்து ஆவரணங்களோடு பரமேச்வரன் பூஜிக்கப்படுகிறார்.


தீக்ஷை பெற்றுக் கொள்ளும் சிஷ்யனாகிய சிவனடியார், கண் மூடிய நிலையில், அந்த மண்டலத்தில் மலரிடுவார். அம்மலரானது மண்டலத்தில் உள்ள எந்த தெய்வத்தின் மீது விழுகிறதோ, அதற்கு தகுந்தாற்போல, சிவனடியாருக்கு தீக்ஷை நாமம் சூட்டப்படும்.மையத்தில் சிவபெருமான் மீது மலர் விழுந்தால் சதாசிவன் என்றும், ராஜராஜ என்ற பெயருடைய, அருண்மொழித் தேவனாகிய, குபேரனின் மீது மலர் விழுந்தால், ராஜராஜ தேவன் என்றும், ஞானம், தர்மம் என்ற சிங்கங்களின் மேல் விழுந்தால், ஞானசிவன், தர்மசிவன் என்றும், தீக்ஷை நாமங்கள் சூட்டப்படும்.


க்ஷத்ரியர்களுக்கு தீக்ஷை செய்யும்போது, 'தேவ' என்று முடிய வேண்டும் என்பது, ஆகம விதி. இப்படி சூட்டப்பட்ட பெயர்களே, கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.இவற்றையெல்லாம் மூலசிவாகம நுால்களிலிருந்தும், 14ம் நுாற்றாண்டை சார்ந்த, சிவபூஜாஸ்தவம் எனும் நுாலின் உரையிலிருந்தும், அகோர சிவாச்சார்ய பத்ததியின், 'ப்ரபா' என்ற உரையில் இருந்தும் அறியலாம். எனவே, தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கும், வேத சிவாகமங்களுக்கும் உள்ள தொடர்பை, யாரும், என்றும் மறுக்க முடியாது. 



Share/Bookmark

ஆகமம் என்றால் என்ன? ஏன் தேவை?




























Share/Bookmark

உணவு செரிக்கும் நேர அளவை அறிவோம்



*குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.*

*பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.*

*புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.*

*பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.*

*முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.*

*பறவைகள் வெப்பத்தைத் தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.*

*பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.*

*அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.*

*மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.*

*அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.*

*நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.*




Share/Bookmark

இயற்கையை புரிந்து கொள்வோம்

திசைகளிலும் உள்ள சக்திகள்:

சகல சௌபாக்யங்களை தரும் எட்டு திசைகளிலும் உள்ள சக்திகளை பற்றி பார்ப்போம்.

1) கிழக்கு (பிராம்மி):
பிரம்ம தேவரின் அம்சமாக அவதரித்தவர் பிராம்மி தேவி ஆவார். இவர் கிழக்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். பிராம்மியை வணங்குவதால் கல்வி அறிவும், குழந்தை பேறும் கிடைக்கும்.

2) தென்கிழக்கு (கெளமாரி):
சரவணனின் அம்சமாக அவதரித்தவர் கெளமாரி தேவி ஆவார். இவர் தென்கிழக்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். கெளமாரி தேவியை வணங்குவதால் பதவி உயர்வு கிடைக்கும்.

3) தெற்கு (வராஹி):
மஹா விஷ்ணுவின் அம்சமாக அவதரித்தவர் வராஹி தேவி ஆவார். இவர் தெற்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். வராஹி தேவியை வணங்குவதால் மன தைரியமும், வெற்றியும் கிடைக்கும்.

4) தென்மேற்கு (சியாமளா):
சியாமளா தேவி மீனாட்சி அம்மனின் அம்சமாவார். இவர் தென்மேற்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். சியாமளா தேவியை வழிபடுவதால் சகல கலைகளிலும் வெற்றி கிடைக்கும்.

5) மேற்கு (வைஷ்ணவி):
மஹா விஷ்ணுவின் அம்சமாக அவதரித்தவர் வைஷ்ணவி தேவி ஆவார். இவர் நாராயணி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் மேற்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். வைஷ்ணவி தேவியை வழிபடுவதால் ஆரோக்யமான உடலும், மனதில் மேன்மையும் உண்டாகும்.

6) வடமேற்கு (இந்திராணி): 
இந்திராணி இந்திரனின் அம்சமாவார். இவர் வட மேற்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். இந்திராணியை வழிபடுவதால் நல்ல வாழ்க்கைத் துணையும், செல்வவளமும்  கிடைக்கும்.

7) வடக்கு (சாமுண்டீஸ்வரி):
சாமுண்டீஸ்வரி ருத்ரனின் அம்சமும் வடக்கு திசையின் சக்தி வடிவமும் ஆவார். சாமுண்டீஸ்வரியை வணங்குவதால் எல்லா செயலிலும் வெற்றி கிடைக்கும்.

8) வடகிழக்கு (மகேஸ்வரி):
மகேஸ்வரி சிவனின் அம்சமும் வடகிழக்கு திசையின் சக்தி வடிவமும் ஆவார். மகேஸ்வரியை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

Share/Bookmark

திசைகளிலும் உள்ள சக்திகள்




1922 வாக்கில் இந்திய ரூபாய் மதிப்ப 1அமெரிக்க டாலர்=2 ரூபாய்.

இதற்க்கு பசு மாடு வளர்ப்பு மிகப்பெரும் காரணம் என்றால் நம்ப முடியுமா, நம்பித்தான் ஆகவேண்டும்.
2 பசு மாடு வளர்ப்பு மாதம் ரூ80,000 கிடைக்கும் என்ற பதிவு பார்த்திருப்பீர்கள்.

அது மட்டுமா
பசுவின் பாலில் இருந்து தயிர், நெய்,வெண்ணெய் போன்ற உணவு பொருட்களும்,
பசுவின் சாணம் எருவாட்டியாக அடுப்பெரிக்க உதவியதும்,
அந்த சாம்பல் கொண்டு பல் துலக்கியதும்,
திருநீர் செய்யபயன்படுத்தப்பட்டதும்,
சாணம், தயிர், கோமேயம் இன்னபிற பொருட்களை கொண்டு பஞகவ்யம் எனும் உரம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்ப்ட்டது.

மேலும் கோமேயம் பூச்சி,புழு விரட்டியாக கூட உபயாகப்பட்டுள்ளது.

சரி இது அனைத்திற்க்கும் இந்திய ரூபாய் மதிப்பிற்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றால்...

காலையில் பல்விளக்க பேஸ்ட்,
அடுப்பெரிக்க அரபு நாட்டு பெட்ரோலிய பொருள்கள்,
கிருமி நாசினி டெட்டால்,
விவசாய உணவு உற்பத்திக்கு உரங்கள்,
உழவு செய்ய டிராக்டர்கள்,
அதற்காக பெட்ரோலிய பொருட்கள்,
விவசாய பண்ணை தொழிலுக்கு தேவையான பலவற்றை இறக்குமதி செய்யப்பட்டதன் விளைவு ருபாய் மதிப்பு குறைந்து கொண்டே வர ஆரம்பித்தது

மேற்சொன்னபடி
பசு வளர்ப்பில் கிடைத்த பொருட்கள் உபயோகிக்கப்பட்டதால் அன்று ரூபாய் மதிப்பு குறையாமல் இருந்து இருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் உழவு மாடு உபயோகம் ஒரு மாபெரும் வரப்பிரசாதம்,
நிலம் உழுதிட,
விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல,
மக்கள் வாகனப்பயன்பாட்டிற்க்கு என பலவகையில் உபயோகிக்கப்பட்டு உள்ளது.

இவை அனைத்தும் ரூபாய் மதிப்பு குறையாதிருக்க மறைமுக காரணங்களாக இருந்து இருக்கும்.

இப்போது ஜல்லிக்கட்டு தடையின் மாபெரும் உள்நோக்கத்தை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சற்று சிந்தித்ததுப் போல்
பசுவதை எதிர்ப்புக்கும் ஆதரவு குரல் கொடுக்க சிந்திக்கலாம்.

நாட்டு மாடு வகைகள்:
1.அத்தக்கருப்பன்
2. அழுக்குமறையன்
3.அணறிகாலன்
4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன்
6. கட்டைக்காளை
7. கருமறையான்
8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன்
10. கட்டைவால் கூளை
11. கருமறைக்காளை
12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன்
14. கள்ளக்காடன்
15. கள்ளக்காளை
16. கட்டைக்கொம்பன்
17. கருங்கூழை
18. கழற்வாய்வெறியன்
19. கழற்சிக்கண்ணன்
20. கருப்பன்
21. காரிக்காளை
22. காற்சிலம்பன்
23. காராம்பசு
24. குட்டைசெவியன்
25. குண்டுக்கண்ணன்
26. குட்டைநரம்பன்
27. குத்துக்குளம்பன்
28. குட்டை செவியன்
29. குள்ளச்சிவப்பன்
30. கூழைவாலன்
31. கூடுகொம்பன்
32. கூழைசிவலை
33. கொட்டைப்பாக்கன்
34. கொண்டைத்தலையன்
35. ஏரிச்சுழியன்
36. ஏறுவாலன்
37. நாரைக்கழுத்தன்
38. நெட்டைக்கொம்பன்
39. நெட்டைக்காலன்
40. படப்பு பிடுங்கி
41. படலைக் கொம்பன்
42. பட்டிக்காளை
43. பனங்காய் மயிலை
44. பசுங்கழுத்தான்
45. பால்வெள்ளை
46. பொட்டைக்கண்ணன்
47. பொங்குவாயன்
48. போருக்காளை
49. மட்டைக் கொலம்பன்
50. மஞ்சள் வாலன்
51. மறைச்சிவலை
52. மஞ்சலி வாலன்
53. மஞ்ச மயிலை
54. மயிலை
55. மேகவண்ணன்
56. முறிகொம்பன்
57. முட்டிக்காலன்
58. முரிகாளை
59. சங்குவண்ணன்
60. செம்மறைக்காளை
61. செவலை எருது
62. செம்ம(ப)றையன்
63. செந்தாழைவயிரன்
64. சொறியன்
65. தளப்பன்
66. தல்லயன் காளை
67. தறிகொம்பன்
68. துடைசேர்கூழை
69. தூங்கச்செழியன்
70. வட்டப்புல்லை
71. வட்டச்செவியன்
72. வளைக்கொம்பன்
73. வள்ளிக் கொம்பன்
74. வர்ணக்காளை
75. வட்டக்கரியன்
76. வெள்ளைக்காளை
77. வெள்ளைக்குடும்பன்
78. வெள்ளைக்கண்ணன்
79. வெள்ளைப்போரான்
80. மயிலைக்காளை
81. வெள்ளை
82. கழுத்திகாபிள்ளை
83. கருக்காமயிலை
84. பணங்காரி
85. சந்தனப்பிள்ளை
86. சர்ச்சி
87. சிந்துமாடு
88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு
90. நாட்டுமாடு
91. எருமைமாடு
92. காரிமாடு
93.கிர்
94.காங்கிரேஜ்
95.புங்கனூர்
96. ஓங்கோல்
97. சாகிவால்
98. தார்பார்க்கர்
99. Rathi
100. அனைவரும் பகிருவோம்.



Share/Bookmark

வீட்டுக்கு வீடு ...நாட்டு பசு வளர்க்க ஆரம்பியுங்க ...



Share/Bookmark

நிபா வைரஸ் சித்த மருத்துவம்



Share/Bookmark

இட்லிக்கு Tomato Sauce வைத்து சாப்பிடும் குழந்தைகள் ! - மருத்துவர் கு.சிவராமன் வேதனை



விஷ்ணுகிரந்தை
48 நாளில் எய்ட்ஸ் மற்றும கேன்சர் ஐ குணமடைய வைக்கும் மூலிகை..!

 உலக ஆராட்சிக்கே சவால் விடும் நம் தமிழரின் கண்டுபிடிப்பு, எளிதில் கிடைக்கும் அந்த மூலிகையின் பெயரை கூறுகின்றார்….

கொட்டக்கரந்தை
.

மூலிகையின் பெயர் –: கொட்டக்கரந்தை.

தாவரவியல் பெயர் -: SPHOERANTHUS MIRTUS.

;தாவரக்குடும்பம் -: ASTERACEAE.

வேறு வகைகள் -: 1. SPHOERANTHUS SENEGACENSIS. 2. SPHOERANTHUS ANGOLENSIS. 3. SPHOERANTHUS HIRTUS.

4. SPHOERANTHUS POLYCEPHALUS.

வேறு பெயர்கள் – விஸ்ணுகரந்தை. மொட்டப்பாப்பாத்தி, நாறும் கரந்தை என்பன. ஆங்கிலத்தில் EAST INDIAN GLOBE-THISTLE & RICE FIELD WEED.

பயன்படும் பாகங்கள் -: செடிமுழுதும்.

வளரியல்பு -: கொட்டக்கரந்தை ஈரமான வளமான இடங்களில் வளரக்கூடியது. முக்கியமாக வயல்களில் நெல்லுடன் கழையாகவும் வரப்போரங்களிலும் வளரக்கூடியது. இதன் தாயகம் ஆப்பிரிக்கா. இது சுமார் 30-60 செ.மீ.உயரம் வளரக்கூடியது. பற்களுள்ள நறுமணமுடைய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட சிறு செடி. இது அதிக கிளைகளைக் கொண்டிருக்கும். தண்டு உருண்டையாக இருக்கும். இலையின் நீளம் 2-7 செ.மீ ம், அகலம் 1 – 1.5 செ.மீ. கொண்டது. பிரவுன் மற்றும் பச்சையாக இருக்கும். பூ தனியாக தண்டின் உச்சியில் குஞ்சம் போன்று சிறு பந்து போன்று உரண்டையான சென்நிறப் பூ கொத்தினை உடையது. பூ உருண்டையாக கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். வெளிபக்கப்பூ பெண் பூக்கள் மத்தியில் நீண்டிருபது தன்மகரந்தசேர்க்கையைக் கொண்டது. நவம்பர் முதல் மார்ச்சு வரை பூத்துக் காய்க்கும். பழம் வாசனையுடையது, குவிந்திருக்கும். நாட்பட்டால் வாசனை மறைந்து விடும்.

மருத்துவப்பயன்கள் -; கொட்டக்கரந்தை மலமிளக்கவும், தாது வெப்பு தணிக்கவும் பயன்படும். நுரையீரல் நோய், யானைக்கால் வியாதி, இரத்த சோகை, கற்பப்பையில் வலி, மூலம், ஆஸ்த்துமா, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி, இருமல், விரைவீக்கம் நோய், மூத்திரப்போக்கு, பெருகுடல் வலி, கொங்கை தளர்ந்து தொங்குதல், பைத்தியம் மற்றும் ‘எயிட்ஸ்’ஆகிய நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வண்டுகடி, இருதய நோய் குணமாகும். இதன் வேரில் ஆயில் எடுத்து உடம்பின் மேல் பூசினால் கண்டமாலை (Scrofula) குணமாகும். பூ கண் பார்வையை அதிகப்படுத்தும். தோல் வியாதி குணமடையும். இதன் விதை மற்றும் வேரின் பொடி குடல் புழுவை (Anthelmintic) அழிக்கும்.

கொட்டக்கரந்தையின் பூக்காத செடிகளைப் பிடுங்கி நிழலில் உலர்த்தி. பொடி செய்து 5 கிராம் பொடியுடன் சிறிது கற்கண்டுப் பொடி கலந்து சாப்பிட்டு வர வெள்ளை உள் ரணம்,, கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். நீடித்துச் சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றைப் பலப்படுத்தும்.

மேற்கண்ட பொடியுடன் கரிசிலாங்கண்ணிப் பொடி சமன் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இள நரை தீரும். உடல் பலம் பெறும்.

‘கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு———-

வெட்டைதணியுமதி மேகம்போம் – துட்டச்————————

சொறிசிரங்கு வன்கரப்பான் றோன்றா மலப்பை—————-

மறிமலமுந் தானிறங்கு மால்.’

குணம் – கொட்டைக் கரந்தைக்கு வெள்ளை, ஓழுக்குப் பிரமேகம், சினைப்பு, கிரந்தி, கரப்பான் இவைகள் நீங்கும். வெளிவராமல் தங்கிய மலத்தைப் போக்கும்.

காய் விடுவதற்கு முன் பயன் படுத்துதல் அதிக பலன் தரும். இதன் பட்டையை அரைத்து மோரில் கலந்து உட்கொள்ள மூலத்திற்கு நல்லது. இதன் சமூலம் தலை, மூளை, இருதயம், நரம்பு இவைகட்குப் பலத்தைக் கொடுக்கும். கசாயமாகச் சாப்பிடப் பைத்தியம், கிரந்தி போம். இக் கசாயத்தோடு சீரகத்தைப் பொடித்துப் போட்டு உட்கொள்ள வயிற்றுக் கோளாறுகள் போம். இதன் சமூலத்தில் சாற்றைச் சூதகத்திற்குச் சுருக்கக் கொடுக்க வெள்ளிக் கம்பியைப் போலாகும். சித்த நூல் படி இதன் சமூலத்தின் ரசமும், இலை ரசமும், வாத முறைக்கும் கற்பமுறைக்கும் மிக்க உபயோகமுள்ளது. ஆயை இராமமூர்த்தி கூறுகிறார் இதன் இலையை நன்கு அறைத்து கசாயமாக 48 நாட்கள் குடித்தால் எயிட்ஸ் என்னும் நோய் குணமாகும் என்கிறார். இது சித்தர்கள் கூற்றாம்.

நன்றி:- பசுமைக்குடில் வலை தளம்


Share/Bookmark

கொட்டக்கரந்தை எய்ட்ஸ் மற்றும கேன்சர் ஐ குணமடைய வைக்கும் மூலிகை..!

KENKATHA


SINDHI


MALENADU GIDDA


PUNGANUR


ONGOLE


BARAGUR


KRISHNA


PUNGANUR COW


         HALLIKAR


NIMARI


UMBLACHERY


SAHIWAL


GIR


LALKANDHARI


MALVI


KERIGHAR


KANKREJ


RED SINDHI COW 


SAHIWAL COW 


PONWAR 


KANKREJ 


KASARGOD DWARF 


GANGATIRI


GAOLAO


NAGORI


NAGORI 


VECHUR


RATHI


LAL KANDHARI 


DEONI COW 


RATHI COW 


KHILARI


DANGI


PULIKULAM BULL 


UMBALACHERRY COW


HARYANA


PUNGANUR BULL 


JAVARI


THARPARKAR


THIRUCHENKODU BREED 


KALA KAPILA 


RED SINDHI COW


KANGAYAM


DEONI


KASARAGOD


KANGEYAM BULL


GIR BULL 


SAHIWAL 


AMRITH MAHAL


DEONI


KANGEYAM COW


PALAMALAI BREED


LAL KABRA


VECHUR COW





Share/Bookmark

நம் நாட்டு மாடுகள் (BULL AND COW)