திசைகளிலும் உள்ள சக்திகள்

திசைகளிலும் உள்ள சக்திகள்:

சகல சௌபாக்யங்களை தரும் எட்டு திசைகளிலும் உள்ள சக்திகளை பற்றி பார்ப்போம்.

1) கிழக்கு (பிராம்மி):
பிரம்ம தேவரின் அம்சமாக அவதரித்தவர் பிராம்மி தேவி ஆவார். இவர் கிழக்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். பிராம்மியை வணங்குவதால் கல்வி அறிவும், குழந்தை பேறும் கிடைக்கும்.

2) தென்கிழக்கு (கெளமாரி):
சரவணனின் அம்சமாக அவதரித்தவர் கெளமாரி தேவி ஆவார். இவர் தென்கிழக்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். கெளமாரி தேவியை வணங்குவதால் பதவி உயர்வு கிடைக்கும்.

3) தெற்கு (வராஹி):
மஹா விஷ்ணுவின் அம்சமாக அவதரித்தவர் வராஹி தேவி ஆவார். இவர் தெற்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். வராஹி தேவியை வணங்குவதால் மன தைரியமும், வெற்றியும் கிடைக்கும்.

4) தென்மேற்கு (சியாமளா):
சியாமளா தேவி மீனாட்சி அம்மனின் அம்சமாவார். இவர் தென்மேற்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். சியாமளா தேவியை வழிபடுவதால் சகல கலைகளிலும் வெற்றி கிடைக்கும்.

5) மேற்கு (வைஷ்ணவி):
மஹா விஷ்ணுவின் அம்சமாக அவதரித்தவர் வைஷ்ணவி தேவி ஆவார். இவர் நாராயணி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் மேற்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். வைஷ்ணவி தேவியை வழிபடுவதால் ஆரோக்யமான உடலும், மனதில் மேன்மையும் உண்டாகும்.

6) வடமேற்கு (இந்திராணி): 
இந்திராணி இந்திரனின் அம்சமாவார். இவர் வட மேற்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். இந்திராணியை வழிபடுவதால் நல்ல வாழ்க்கைத் துணையும், செல்வவளமும்  கிடைக்கும்.

7) வடக்கு (சாமுண்டீஸ்வரி):
சாமுண்டீஸ்வரி ருத்ரனின் அம்சமும் வடக்கு திசையின் சக்தி வடிவமும் ஆவார். சாமுண்டீஸ்வரியை வணங்குவதால் எல்லா செயலிலும் வெற்றி கிடைக்கும்.

8) வடகிழக்கு (மகேஸ்வரி):
மகேஸ்வரி சிவனின் அம்சமும் வடகிழக்கு திசையின் சக்தி வடிவமும் ஆவார். மகேஸ்வரியை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
No comments :

No comments :

Post a Comment