சித்தர்களின் சர்வரோகங்கள் நீக்கும் புருவமத்திசாதன முறை விளக்கம் (4448 நோய்களும் குணமாக)



இன்று எங்கு பார்த்தாலும் நோய், நோயின்றி வாழதலே வாழ்வின் பெரும் சிறப்பு, சித்தர்கள் கூறிய மருத்துவத்திலிருந்து இன்று நாம் பல லட்சம் செலவு செய்யும் ஆங்கில மருத்துவத்திற்கு சென்று விட்டோம்.
சித்தர்களது மருத்துவம் எளிமையானது, எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்று சொல்லிவைத்தார்கள். சித்தர்கள் மனித உடலுக்கும் அவனைச் சூழ உள்ள இயற்கையிற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பினை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். உடலில் வரும் பாதிப்புகள் பஞ்சபூத சம நிலை இன்மையினால் வருவது, இந்த பஞ்ச பூதங்கள் ஸ்தூல வடிவாக உடலாக பரிணமிக்கும் அதே வேளை, சூஷ்ம உடலிலும் ஆறாதாரங்களாக பரிணமித்துள்ளது.
அவற்றின் இயல்பு வருமாறு;
******************************
பிருதிவி பூதம் - மூலாதாரம்
அப்பு (நீர்) பூதம் - சுவாதிஷ்டானம்
தேயு (தீ) பூதம் - மணிப்பூரகம்
வாயு பூதம் - அநாகதம்
ஆகாய பூதம் - விசுத்தி
மனம் - ஆக்ஞா
இதில் ஒவ்வொரு பூதத்தின் குறைபாடுகள் அந்த ஆதாரங்களின் சக்தி குறையும் போது சூஷ்ம உடலில் உருவாகி நீண்டகாலத்திற்க
ு பின்னர் ஸ்தூல உடலிற்கு வரும். இந்த அடிப்படையிலேயே ஒரு சித்தவைத்தியர் தனது சிகிச்சையினை செய்யவேண்டும்.
மேலே கூறிய ஐம்பூதங்களுக்கும் சூஷ்ம உடலில் உள்ள ஆதாரத்திற்கும் உள்ள தொடர்பினை பார்த்தீர்களானால் ஆறாவதான ஆக்ஞா மனத்துடன் தொடர்பு பட்டுள்ளது. மனம் என்பதே மனிதன் இந்த பிரபஞ்சத்துடன், ஐம்பூதங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சாதனம்.
இது திருமூலர் கூறிய ஒரு எளிய முறை தியானப்பயிற்சி; சித்தர்களின் பாகுபாட்டி மனிதனுக்கு தோன்றக்கூடிய வியாதிகள் 4448, இதற்குமேல் எந்த வியாதியும் இல்லை, இன்று ஆங்கிலப் பெயரிட்டு அழைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வியாதிகளும் இவற்றுக்குள் அடங்கிவிடும். இந்தப்பயிற்சியா
ல் 4448 வியாதிகளும் இல்லாது போய்விடும் என்பது திருமூலே வாக்கு, இந்த சாதனை பற்றிக் கூறும் பாடம் வருமாறு; (திருமூலர் ஞானக்குறி 30, பாடல் 14) ;
நாலாயிரத்தி நானூத்தி நாற்பத்தெட்டு
மாலாம் வியாதியும் மாத மடிந்திடும்
பாலாங் குழந்தையாம் பார் புருவ மையத்தின்
மூலா மனத்தை மூட்டு கண் மூக்கிலே
இதன் பொருள் வருமாறு:
**************************
மனதினை கண்ணும் மூக்கும் சந்திக்கும் மூட்டில் (மூட்டு கண் மூக்கிலே) அதாவது புருவமத்தியில் வைத்து தியானித்து வர 4448 வியாதிகளும் மடிந்து குழந்தையைப்போன்ற இளமை தோன்றும் என்கிறார்.
இதனை எப்படி பயிற்சிப்பது?
******************************
அதிகாலை காலை 04.00 - 06.30 வரை மிக உகந்த நேரம், அல்லது மாலை 06.00 - 07.00 மணிவரை முதலில் அமைதியாக ஓரிடத்தில் முதுகலும்பு வளையாதவாறு நேராக நாற்காலி ஒன்றிலோ, அல்லது நிலத்தில் கால்மடித்து உட்காரமுடியுமானால் அவ்வாறோ இருக்கவும். அல்லது சாய்வு நாற்காலியில் முதுகினை நேராக சாய்த்தவாறும் செய்யலாம்.
பின்பு கண்களை மூடி புருவமத்தியினை நோக்கி செலுத்தவும், இது பொதுவாக நீங்கள் ஏதாவதொன்றினை ஆழமாக யோசிக்கும் போதோ கண்கள் செல்லும் நிலையினை அவதானித்தால் செய்வதற்கு இலகுவாக இருக்கும். கண்கள் வலிக்காமல் இருக்கும் நிலையே சரியான நிலை,
கண்கள் வலியெடுத்தால் நீங்கள் உங்கள் நிலைக்கு மீறி முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இப்படி செய்யும் போது ஆரம்பத்தில் நீங்கள் மனத்திரையில் இருளாகவும், சிறிது நாட்களுக்கு பின்னர் ஒளியும் தோன்ற ஆரம்பிக்கும். அந்த ஒளிதெரியும் நிலையிலிருந்து உங்கள் நோய் படிப்படியாக குணமாக ஆரம்பிக்கும். இதற்கு முன்னர் கீழ்வரும் வாசகத்தினை எழுதி மனப்பாடம் செய்துகொள்ளவும், ஆரம்ப நாட்களில் மறந்தால் கண்களைத்திறந்து வாசித்து மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
எனது நோய் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலால் குணமாகப் போகிறது, குணமாகிக்கொண்டு வருகிறது, குணமாகி விட்டது, இந்த வாசகங்களை உச்சரிக்கும் போது அது நடக்கும் போது சூழல், உடல் எப்படி இருக்குமோ அதனை மனக்கண்ணில் பார்த்து வரவும். நாட்பட்ட புற்று நோய், நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு தொடர்ச்சியான 40 நாட்கள் பயிற்சியின் பின்னர் நிச்சயமாக உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் காண ஆரம்பிக்கும்.
( நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும் படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும்.
அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. - குங்குமம் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமி நாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு , நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி, தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தகாத விளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம்.இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்ற
ன. மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்.)

No comments :

No comments :

Post a Comment