ஆறுதலே சிறந்த மருந்து...
ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தனர் அவர்களுக்கு 12 ஆண்டுகள் கழித்து ஒரு மகன் பிறந்தான்.அந்த குழந்தையை இரண்டு பேரும் கண் போல் காப்பாற்றி வந்தனர்.
ஒரு நாள் அந்த 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது, அதன் அருகில் ஒரு மருந்து பாட்டில் திறந்து இருப்பதை அவன் தந்தை பார்த்தார்.வேளைக்கு போகும் அவசரத்தில் மனைவியிடம் அதை மூடி வைக்குமாறு சொல்லிவிட்டு சென்று விட்டார்.
அவர் மனைவியும் சரிங்க என்று சொல்லிவிட்டு சமையல் வேலையில் மூழ்கிவிட்டாள்.குழந்தை விளையாடும் போது அந்த பாட்டிலை பார்த்தது, அது கொஞ்சம் குடித்து பார்த்தது இனிப்பாக இருக்கவே முழுவதையும் குடித்துவிட்டது.
சமையல் வேலை முடித்து வெளியே வந்த தாயாருக்கு ஒரே அதிர்ச்சி குழந்தை கையில் மருந்து பாட்டிலுடன் மயங்கி கிடந்தது.உடனடியாக பதறி அடித்துக்கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்றாள் .
மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு பெரியவர்கள் எடுத்து கொள்ளும் மருந்தை குழந்தை அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டதால் குழந்தை இறந்து விட்டது என்று கூறிவிட்டார்கள்.
குழந்தை மருந்தை குடித்து இறந்து விட்டது என்று எப்படி கணவனிடம் சொல்வது என்று பயந்து கொண்டிருந்தாள்.தனது கணவன் என்ன சொல்வாரோ என்று தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
குழந்தை இறந்த செய்தியை கேள்விப்பட்டு பதறி அடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தார் அவன் தந்தை.மனைவியை பார்த்தவுடன் ஓடி வந்து கட்டி அணைத்து நம்ம குழந்தை அநியாயமாக இறந்து விட்டதே என்று கதறி அழுதார் ,பரவாயில்லையம்மா உனக்கு நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறினார்.
அந்த தந்தையின் ஆறுதல் வார்த்தைகளை கேட்டு அவன் மனைவி மற்றும் அங்கு இருப்பவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.குழந்தை இனி வரப் போவதில்லை, அவன் மனைவி மருந்து பாட்டிலை மூடி வைத்துயிருந்தால் குழந்தை இறந்திருக்காது இவ்வளவு நடந்தும் மனைவியை திட்டாமல் ஆறுதல் சொல்கிறானே என்று அதிசயித்தனர்.
அவன் தாயை திட்டுவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை.பத்து மாதம் தன் வயிற்றில் சுமந்த தாய்க்கே வலி அதிகம்,பாலூட்டி வளர்த்த தாய்க்கே குழந்தையின் இறப்பு மிகப்பெரிய இழப்பு.இப்படிப்பட்ட நேரத்தில் அவளை திட்டுவது நியாயமில்லை.இந்த நேரத்தில் தான் கணவனுடைய அன்பும் அரவணைப்பும் தேவை .அதை தான் அவள் கணவனும் செய்தான்.
நீதி: ஆகவே நண்பர்களே இப்படிப்பட்ட நேரத்தில் அடுத்தவர் மேல் பழி போடாமல் அவர்க்ளுக்கு ஆறுதல் கூறுங்கள்...ஆறுதலே சிறந்த மருந்து..
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment