விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!
அக்குப்பிரஷர்
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக்
கொள்கிறோம்.
கொள்கிறோம்.
அப்படி செய்தால், வலி குறைகிறது.
இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர்புள்ளிகள் உள்ளன.
நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.
அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம்.
ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்?
வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம்.
அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம்.
அடிக்கடி மாத்திரைகள்எடுத்து கொள்வதால், அசிடிட்டியால்துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது?
நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள்,
நம் உள்ளங்கைகளில் உள்ளன.
நம் உள்ளங்கைகளில் உள்ளன.
படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும்.
கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
14 முறைஅழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும்.
அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும்,
14 முறை முடிப்பதற்கு முன்பே
தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம்.
தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம்.
வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம்
கொடுக்கவும்.
அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள்
தலைவலி போயே போச்சு!
தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன.
விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல்,
இருமல் இவை வெகுவாக
குறைக்கப்படுகின்றன.
குறைக்கப்படுகின்றன.
விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14
முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன.
மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன.
ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி,
வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும்
நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில்
ஒரு கோடு தெரியும்.
வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும்
நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில்
ஒரு கோடு தெரியும்.
அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி
விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது.
விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது.
மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க
இப்புள்ளி உதவுகிறது.
இப்புள்ளி உதவுகிறது.
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release)
தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது
அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது
அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
பாதிப்பு உள்ளவர்களுக்கு,
இப்புள்ளியில் அழுத்தும் போது வலிதெரியும்.
இப்புள்ளியில் அழுத்தும் போது வலிதெரியும்.
இரு கைகளிலும் அழுத்தம்
கொடுக்கலாம்.
கொடுக்கலாம்.
அசிடிட்டி
அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அதிகமான வாயு வெளியேறுகிறது.
அதிகமான வாயு வெளியேறுகிறது.
மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது.
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க
பெரிதும் உதவுகிறது.
பெரிதும் உதவுகிறது.
LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14
முறைகள் அழுத்தம் கொடுத்தால்,
மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
முறைகள் அழுத்தம் கொடுத்தால்,
மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி :
கணினியில் வேலை செய்வதால், கழுத்தில்
உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை
உண்டாக்குகின்றன.
உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை
உண்டாக்குகின்றன.
எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம்.
கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை
விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.
விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும்,
மற்றொரு கையின்
இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம்
கொடுக்க வேண்டும்.
மற்றொரு கையின்
இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம்
கொடுக்க வேண்டும்.
பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும்.
இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது,
கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது.
கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது.
கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள்
முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள
வேண்டியிருக்கும்.
முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள
வேண்டியிருக்கும்.
அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும்
போது, சிறிது, சிறிதாக மாத்திரையின்
போது, சிறிது, சிறிதாக மாத்திரையின்
அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும்.
நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது.
இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள்
விரிவடைந்து, ரத்த அழுத்தம்
குறைகிறது.
காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள்
விரிவடைந்து, ரத்த அழுத்தம்
குறைகிறது.
தலை உச்சியில்GV20 என்ற புள்ளி உள்ளது.
காதுகளிலுருந்துதலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில்
இப்புள்ளி உள்ளது.
இப்புள்ளி உள்ளது.
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம்
இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.
இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.
H9 , GV20 இப்புள்ளிகளில்,14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள்
அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ந்த அழுத்தம் சீரடைகிறது.
அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ந்த அழுத்தம் சீரடைகிறது.
இதை தவிர காலில், பெருவிரல்,
இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது.
இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது.
இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது.
இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த
அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.
அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!
மக்கள் வேலைக்காக, பிள்ளைகளின் படிப்புக்காகத் தங்கள் சொந்த ஊர்களை விட்டுவிட்டு சென்னை, கோவை, மதுரை போன்ற அருகில் உள்ள நகரங்களில் குடியேறுவது இரு தலைமுறைகளாக அதிகரித்துவரும் சமூக நிகழ்வு.
அதனால் நகரங்களைப் பொறுத்தவரையில் சொந்த வீட்டில் வசிப்பவர்களைக் காட்டிலும் வாடகை வீட்டுவாசிகள்தான் மிக அதிகம். அதைப் போலவே வீட்டு உரிமையாளர்களுக்கும் வாடகைக்குக் குடியிருப்போருக்கும் பிணக்குகளும் அதிகம். இருவரும் சட்டப்படியான ஒப்பநதம் எதையும் செய்துகொள்ளாததும் சட்ட உரிமைகளை அறிந்துகொள்ளாததும்தான் இதற்கான காரணங்கள்.
வாடகை வீட்டில் குடியிருப் போருக்கு அந்த வீட்டில் என்ன உரிமை இருக்கிறது, 10 வருடத்துக்கு மேல் அந்த வீட்டில் வசித்துவிட்டால் அந்த வீட்டை உரிமை கோர முடியுமா? என்பதுபோல் பல கேள்விகள் எழுவது இயற்கையே. அந்தக் கேள்விகளையும் சந்தேகங்களையும் போக்கும் பொருட்டு வீட்டு வாடகைச் சட்டத்தின் சில முக்கியமான அம்சங்களை இங்கே தருகிறோம்.
வாடகைதாரர், உரிமையாளர் ஒப்பந்தம்
வாடகைதாரரும், உரிமையாளரும் முதலில் ஒப்பந்தப் பத்திரம் எழுதிக்கொள்வது அவசியம். அந்தப் பத்திரத்திலேயே முரண்பாடுகள் தீர்க்கப்படும். அதாவது வாடகை, பராமரிப்புத் தொகை, கரண்ட் பில், ஒயிட் வாஷ், அட்வான்ஸ் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். முரண்பாடு ஏற்படும்போது அட்வான்ஸ் தொகையை இருவரும் மாற்றிச் சொல்லக்கூடும். மேலும் ஒயிட் வாஷ் அடிப்பது எங்கள் பொறுப்பு இல்லை என வீட்டு உரிமையாளர் மறுக்கக்கூடும். வாடகைதாரர் ஒயிட் வாஷ் தொகையைக் கொடுக்க வேண்டும் என்றால் அதைப் பத்திரத்தில் குறிப்பிட்டால் பிரச்சினை இல்லாமல் போய்விடும்.
வாடகை ஒப்பந்தப் பத்திரம் 20 ரூபாய் முத்திரைத்தாளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை விற்பனையாளரிடம் வாங்கி வாடகைதாரர் - உரிமையாளர் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நிரப்ப வேண்டும். இருவரின் நிரந்தர முகவரியும் அதில் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் இந்த ஒப்பந்தம் 11 மாதத்திற்குத்தான் போடுவார்கள். 11 மாதத்திற்கு ஒருமுறை அதைப் புதுப்பித்துக்கொள்ளலாம். 11 மாத காலத்திற்கு மேற்பட்ட பத்திரப் பதிவுகளைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பதால் வீட்டு வாடகைப் பத்திரங்கள் 11 மாத கால அளவில் போடப்படுகின்றன.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
1. வாடகைதாரர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம். சென்னையைப் பொறுத்தவரை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம். வெளியூர்களில் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.
2. வாடகைக் கட்டணம் வசூலிப் பதற்காகச் சட்ட வரையறை எதுவும் வகுக்கப்படவில்லை. ஆனால் வாடகைக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் உரிமையாளர் அதற்கேற்றபடி வாடகைக் கட்டணத்தை உயர்த்தலாம். ஆனால் அதற்கு வாடகைதாரருக்கு உடன்பாடு இல்லாதபோது அவர்கள் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். அதுபோல உரிமையாளரும் வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் கட்டணம் உயர்த்துவதற்கான உரிய காரணத்துடன் நீதிமன்றம் சென்று முறையிடலாம்.
3. வாடகை வீட்டில் ஒருவர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டை உரிமை கோரச் சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோரச் சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும் பட்சத்தில் உரிமை கோர வாய்ப்பிருக்கிறது.
வாடகைதாரர் அதிகமான வாடகைக்குக் குடிவந்த பிறகு, அந்தக் கட்டணம் அதிகம் என நினைத்தாலும் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 12 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடிவருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடிவந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைகள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்.
வாடகை முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்குச் சட்டம் நிர்ணயித்திருக்கும் தொகை என்பது ஒரு மாத வாடகைதான். அதாவது வாடகைதாரர் அளிக்கவிருக்கும் வாடகையை முன்பணமாகச் செலுத்தினாலேயே போதுமானது.
4. உரிமையாளர் நினைத்ததும் உடனே வீட்டு வாடகைதாரரைக் காலிசெய்ய வைக்க முடியாது. வீட்டைக் காலி செய்யக் கோர முறையான சில காரணங்களைச் சட்டம் சொல்கிறது. வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்தத் தவறும்போது காலிசெய்யச் சொல்லலாம். அதாவது ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் வாடகை தருவதாக ஒப்பந்தம் என்றால் உரிமையாளர் அந்தத் தேதியிலிருந்து 15 நாட்கள் வரை பார்க்கலாம். அதற்குப் பிறகு வாடகை செலுத்தத் தவறினால் காலிசெய்யச் சொல்லலாம்.
வாடகை ஒப்பந்தப் பத்திரத்திற்கு மாறாக வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விடும்போது காலிசெய்யச் சொல்லலாம். வீட்டின் மதிப்பையும் உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதைச் சேதப்படுத்தியிருந்தால் காலிசெய்யச் சொல்லலாம்.
வீடு எந்த உபயோகத்திற்கு விடப்பட்டதோ அதைத் தவிர்த்து மற்ற உபயோகத்திற்குப் பயன்படுத்தும்போது. உதாரணத்திற்கு வசிப்பதற்காக எடுத்து அதில் ஏதேனும் வணிகம் செய்தால். சட்ட விரோதமான செயல்களுக்காக அந்த வீட்டைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்திற்காக வாடகைதாரர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால் காலிசெய்யச் சொல்லலாம்.
வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்குத் தொல்லை தரக்கூடிய செயல்களில் வாடகைதாரர் ஈடுபடும்போதும், அந்த வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தாலும் (மலைவாசஸ்தலங்களுக்கு இந்த விதிமுறை செல்லாது) காலிசெய்யச் சொல்லலாம்.
5. வீட்டு உரிமையாளர் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை வாடகைதாரருக்குத் தடைசெய்ய முடியாது. அதற்கான உரிமைச் சட்டத்தில் இல்லை. அதுபோலத் திடீரென வீட்டைக் காலிசெய்யச் சொல்லவும் முடியாது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும்பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும்.
வீட்டு வாடகைச் சட்டம் சொல்வது என்ன?
வீட்டு வாடகைச் சட்டம் சொல்வது என்ன?
Subscribe to:
Posts
(
Atom
)